கறை
திரையரங்கத்தில் கிரிமீது இருள் கவிந்தது. மத்தியில் இருந்து கிளம்பிய வெம்மை அருகாமையில் வந்துவிட்ட ஒரு காட்டு மிருகத்தின் மூச்சுக்காற்றாய்ப் பரவியது. கிரியின் கண்ணுக்குள் இருள் கெட்டியான திரவமாய்ப் பரவிப் பார்வையைக் குலைத்தது. அவனுக்குள் சற்றே அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் தொடங்கியது. பொறுமை…